டபுள் டிஜிட்டில் தொகுதி வேண்டும்: அடம்பிடிக்கும் மா.கம்யூ

2026 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் என மா.கம்யூ கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். 

டபுள் டிஜிட்டில் தொகுதி வேண்டும்: அடம்பிடிக்கும் மா.கம்யூ
டபுள் டிஜிட்டில் தொகுதி வேண்டும்: அடம்பிடிக்கும் மா.கம்யூ

2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் மா.கம்யூ கட்சி நீடித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூ கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் விரைவில் நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட மா.கம்யூ விரும்புகிறது. தங்களது இந்த ஆசையை அடிக்கடி திமுக தலைமையிடம் அறிவுறுத்தி வருகிறது. 

தூத்துக்குடி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெகுஜன வசூல், தோ்தல் நிதியளிப்பு, அரசியல் விளக்க சிறப்பு பேரவைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் பேசுகையில்,

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஜனநாயக படுகொலை. இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மோசமான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தப் பிரிவு மக்களுக்கும் நன்மை இல்லாத நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து இதுவரை கருத்து சொல்லாத ஒரே தலைவா் விஜய் தான்.

திமுக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கவில்லை. அவா்கள் அமைத்த பின்பு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடைபெறும். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். என்றார் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow