மாநிலங்களவை உறுப்பினர்களாக எல்.முருகன், ஜெ.பி.நட்டா தேர்வு...

Feb 20, 2024 - 19:15
மாநிலங்களவை உறுப்பினர்களாக எல்.முருகன், ஜெ.பி.நட்டா தேர்வு...

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், குஜராத்தில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்துகான மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று (20.02.2024) அறிவிக்கப்பட்டதை அடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மத்திய பிரசேத பாஜக நிர்வாகிகளுடன் பெற்றுகொண்டார்.

இதேபோல் குஜராத் மாநிலங்களவை உறுப்பினருக்கு போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்துக்கான மாநிலங்களவை பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow