செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ... மாதாந்திர பிளான்கள் எவ்வளவு உயர்வு?... முழு விவரம்!

ஆண்டு கட்டணத்தை பொறுத்தவரை 365 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 பிளான் ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 24 ஜிபியுடன் 336 நாள் வேலிடிட்டி வழங்கும் ரூ.1,559 பிளான் ரூ.1,899 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jun 27, 2024 - 20:09
செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ... மாதாந்திர பிளான்கள் எவ்வளவு உயர்வு?... முழு விவரம்!
ரிலையன்ஸ் ஜியோ

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தொழில்நுட்பம் நிறைந்த இந்த நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை எனலாம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனிதர்களின் வாழ்வியல் என அனைத்திலும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் இணையதளம் மூலம் உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனையையும் நாம் நொடிப்பொழுதில் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் அரசின் பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்க குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றன.

பிஎஸ்என்எல் தவிர மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவை வரை வழங்கி வருகின்றன. இதில் முகேஷ் அம்பானியின்  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில்தான் அதிக சந்தாதாரர்கள் உள்ளனர். ஏனெனில் ஜியோ ஓரளவு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவையை வழங்கி வருவதே இதற்கு காரணம்.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 12.5% முதல் 25% வரை ஜியோ உயர்த்தியுள்ளது.

28 நாள் வேலிடிட்டி கொண்ட பிளான்களை பொறுத்தவரை தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ.155 பிளான் ரூ.189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.209 பிளான் ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 1 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.239 பிளான் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.299 பிளான் ரூ.349 ஆக உயர்ந்துள்ளது.

தினமும் 2 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.349 பிளான் ரூ.399 ஆகவும், தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும்  ரூ.99 பிளான் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு கட்டணத்தை பொறுத்தவரை 365 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 பிளான் ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 24 ஜிபியுடன் 336 நாள் வேலிடிட்டி வழங்கும் ரூ.1,559 பிளான் ரூ.1,899 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow