ஜெட் வேகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 640 உயர்வு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 26, 2025) திடீரென உயர்ந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.640 உயர்ந்து ரூ.94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று (நவ.,26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சற்றே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் விலை உயர தொடங்கியிருக்கிறது.
தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளியும் விலை ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு கிராம் தற்போது ரூ 176-க்கு விற்பனை செய்ப்பட்டுகிறது.
தங்கத்தின் ஏற்றம் இறக்கம் சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. கடந்த நாட்களில் குறைந்து வந்த நிலையில், இன்றைய உயர்வு நகை வாங்குபவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
What's Your Reaction?

