"குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக வளராது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

"குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக வளராது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.95 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என்றும் குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது, காலூன்ற முடியாது என்றும் கூறினார். 

தமிழ்நாட்டில் இன்றைக்கும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்க கூடியதாக உள்ளதாக கூறிய அமைச்சர் ரகுபதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரை மோடி உச்சரித்தாலும் அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கப்போவதில்லை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் கூறினார். 

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்தது கிடையாது என்று கூறிய அமைச்சர், மத்திய அரசு திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பு குறைவு, மாநில அரசின் பங்களிப்பு அதிகம், இருப்பினும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow