கோவையில் புதிய நூலகம் திறப்பது எப்போது?.. முதலமைச்சர் கூறிய பதிலென்ன..
கோவை மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய நூலகம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான பதிலுரையளித்த நிதித்துறையமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், நேற்று(21.02.2024) நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்ததோடு அந்த பணிகள் எப்போது முடிவு பெறும் என கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கோவையில் நூலகம் உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
கோவையில் அமையவிருக்கும் அந்த புதிய நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் எனவும், நூலகம் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?