அரசுவேலை, கை நிறைய பணம்... நீதிபதி எனக்கூறி இளைஞரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த பெண்...
அரசுவேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.43 லட்சம் ஏமாற்றிய போலி பெண் நீதிபதியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை இளைஞர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுவேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.43 லட்சம் ஏமாற்றிய போலி பெண் நீதிபதியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை இளைஞர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.டி. கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்துள்ளார். அப்போது சக டிரைவர் ஒருவர் ராஜேஷிடம், வழக்கறிஞராக இருந்த தன் மனைவி தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், நீதிபதியாக இருப்பதாகவும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பிய ராஜேஷ் மொத்தமாக 43 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவருக்கு போலியான பணி ஆணையை போலி நீதிபதி கொடுத்ததாகவும் தெரிகிறது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு நீதிமன்றங்களில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் எனக்கூறி சம்பளம் கொடுக்காமல் ராஜேஷை அலையவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், பணத்தை திரும்பக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்
அதன்பிறகு, ராஜேஷ் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வழக்கறிஞர் உதவியுடன் துப்பு துலக்கிய போது, வழக்கறிஞரான அந்தப் பெண், தன்னை நீதிபதி என கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால், நீதிமன்றப் பெயரை வைத்து மோசடியில் ஈடுபட்ட போலி நீதிபதி ராதிகா மற்றும் அவரது கணவர் கணபதி என அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பத்திரிக்கையாளர்களை சந்தித்து ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
What's Your Reaction?