பொன்முடி பதவிப் பிரமாணத்தை தடுக்க முயற்சி..? ஆளுநரின் பிளான்... அப்பாவு விளக்கம்...
பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை காலதாமதப்படுத்தவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை காலதாமாக்கவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக பேசப்படும் நிலையில், சபாநாயகர் அப்பாவுவின் பேட்டி கவனத்தை பெற்றுள்ளது.
பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவரின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார். இதனிடையே பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார்.
அதன்படி இன்று பதவிப் பிரமாணம் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாளை மறுதினம் (மார்ச் 16) டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், பொன்முடி இந்திய தேர்தல் ஆணையத்தைதான் அணுக வேண்டும்.
பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை காலதாமதப்படுத்தவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம், இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை காலதாமதப்படுத்துவதற்காக இருக்காது. திட்டமிட்ட பணிகள் இருந்திருக்கலாம். அவர் மீண்டும் தமிழகம் வந்ததும் இதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?