அதிமுக- பாஜக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி: லிஸ்ட் ரெடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் அதிமுக- பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. கூட்டணி உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட நிலையில், யார் யாருக்கு எத்தனை தொகுதி என நாளை முடிவெடுக்கப்பட உள்ளது. 

அதிமுக- பாஜக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி: லிஸ்ட் ரெடி!
அதிமுக- பாஜக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி

தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. அதே நேரம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

நாளைக்குள் அதிமுக- பாஜக  உள்பட கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடித்து பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காகவே பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வரவுள்ளார். அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் முகாமிட்டு உள்ளார்.

இன்று காலை அமமுக பொதுச்செயலாளர் தினகரன், பியூஸ் கோயலை சந்தித்தார். இதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகி வேலுமணி உள்ளிட்டோர் பியூஸ் கோயலை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 

பாஜக தலைமையிலான அணியில் டிடிவி தினகரனின் அமமுக, புதிய நீதி கட்சி, ஐஜேகே,  ஆகிய கட்சிகள் உள்ளது.  எனவே  அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து உள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. 

குறைந்தபட்சம் 40 முதல் 45 தொகுதிகளை பாஜக தரப்பில் இருந்து கேட்கப்பட்டது.அதில் பாஜகவிற்கு 20 முதல் 25 தொகுதிகளும், அமமுகவிற்கு 8 முதல் 10 தொகுதிகளும், ஐஜேகே, புதிய நீதிக்கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என கமலால வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள  பாமகவிற்கு 18 தொகுதிகளும் வாசனுக்கு  4 தொகுதிகளும், புரட்சி பாரதம், புதிய தமிழகம், ஜான் பாண்டியன் ஆகிய கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 

 

புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் தெரிகிறது. நாளை  22ஆம் தேதி சதூர்த்தி தினத்தில் தொகுதி பங்கீடு முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow