ச்சீசீ இதெல்லாம் ஒரு ஆசையா: பெண்களின் உள்ளாடை திருடி செல்பி, கேரள இளைஞர் கைது

பெங்களூரில் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்பி எடுத்த கேரள இளைஞரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ச்சீசீ இதெல்லாம் ஒரு ஆசையா: பெண்களின் உள்ளாடை திருடி செல்பி, கேரள இளைஞர் கைது
பெண்களின் உள்ளாடை திருடி செல்பி, கேரள இளைஞர் கைது

பெங்களூரு வித்யாநகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்களின் உள்ளாடைகளை துவைத்து காய வைத்து இருந்தனர். அப்போது பகல் நேரத்தில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த இளைஞர். திடீரென வீட்டில் புகுந்து காய வைத்திருந்த  உள்ளாடைகளை மட்டும் திருடியுள்ளார். இதன் பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார். 

அப்போது இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து ஹெப்பகோடி போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

உள்ளாடைகளை திருடிய இளைஞர் கேரளாவை சேர்ந்த அமல்என்ஜி (23) என்பதும், இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி பெங்களூருக்கு வந்து இருக்கிறார். பின்னர் ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரது அறையில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். அப்போது பகலில் சுற்றி திரியும் அவர் வீட்டின் வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடிசென்றது தெரியவந்தது.

இளைஞரின் செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திருடிசென்ற பெண்களின் உள்ளாடைகளை அணிந்து செல்பி மற்றும் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அமல்என்ஜியை அவரது அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் பெண்களின் 20 ஜோடி உள்ளாடைகள் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow