காயம் காரணமாக விலகிய வார்னர்...ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

வார்னர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய 10 நாட்கள் வரை தேவைப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Feb 24, 2024 - 13:49
Feb 24, 2024 - 13:50
காயம் காரணமாக விலகிய வார்னர்...ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். 

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வார்னர் விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வார்னர், 20 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்தில் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வார்னர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய 10 நாட்கள் வரை தேவைப்படும் என்றும் மார்ச் 22-ல் தொடங்கும் ஐபிஎல் போட்டிக்குள் தயாராகிவிடுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow