திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்த கல்யாண மன்னன்.. சென்னை டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார்
மேட்ரிமோனி இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளதாக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் என்னதான் படித்து வேலைக்கு போய் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு விசயத்தில் ஆண்களிடம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில ஆண்டுகளாக சென்னை தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்தார்.
இந்த பதிவின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டில் நல்ல வேலையில் இருப்பதாகவும் மாதந்தோறும் நல்ல பணம் சம்பாதிப்பதாகவும் தங்களுடைய ஜாதகத்தை கொடுத்தால் தன்னுடைய அம்மாவிடம் கொடுத்து விட்டு, சரி என்றவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதனை நம்பிய இளம்பெண் தனது ஜாதகத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய தாயார் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் உங்களை பார்க்க விரும்புகிறேன் என சென்னை வந்துள்ளார். மாரிமுத்து, சென்னை வரும் பொழுது தனியார் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கிய மாரிமுத்து அந்த இளம்பெண்ணையும் தன்னுடன் வந்து தாங்குமாறு வற்புறுத்தி உள்ளார். திருமணம் செய்து கொள்ளத்தானே போகிறோம் என கூறியதை அடுத்து இளம்பெண் தங்கிய போது அவருடன் உடலுறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை வரும் போதெல்லாம் நட்சத்திர விடுதியில் தங்கி ரூம் எடுப்பதும் அதே போன்று தனக்கு கடன் அதிகமாக இருப்பதாக கூறி இளம் பெண்ணிடம் இருந்து சிறுக சிறுக பணம் மற்றும் நகை என 4 லட்சம் ரூபாய் வரை இளம் பெண்ணிடம் வாங்கி உள்ளார் மாரிமுத்து. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இதே போன்று பழகி வந்த சூழ்நிலையில் தான் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாரிமுத்து தொலைபேசி எண்ணை ஆஃப் செய்து வைத்துள்ளார்.
மாரிமுத்துவின் மற்றொரு தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொழுது தான் சென்னை வரப்போவதில்லை எனவும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் இது பற்றி வெளியே கூறினால் தன்னுடைய ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் ஏற்றி விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண், மாரிமுத்துவின் தாயிடம் நடந்தவற்றை அனைத்தையும் கூறி முறையிட்டுள்ளார். இதற்கு மாரிமுத்துவின் தாய் ஜெயராணி என்னுடைய மகன் 100 பெண்களிடம் பழகி வருகிறார். அதற்காக 100 பெண்களையும் திருமணம் செய்து கொள்வதா? என கூறியுள்ளார் மேலும் இதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பாக மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாரிமுத்துவின் தாய் ஜெயராணி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தன்னுடைய மகனுக்காக முன்ஜாமின் பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமினை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இளம் பெண் ஏற்கனவே சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சேலையூர் மகளிர் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் வழக்கு பதிவு செய்து சில நாட்கள் ஆகியும் இதுவரை நெதர்லாந்து நாட்டில் இருக்கும் மாரிமுத்துவையும் மற்றும் அவரது தாய் ராமநாதபுரத்தில் வசிப்பது தெரிந்தும் எந்த விதமான விசாரணையும் நடத்தவில்லை என இன்று ஏப்ரல் 8ஆம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல பெண்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒரு பெண் இதே போன்று தானும் தன்னுடைய பணத்தை ஏமாந்து இருப்பதாகவும் ஆடியோவில் குறிப்பிட்டார் இந்த நிலையில் மாரிமுத்துவினால் தன்னைப்போல பல பெண்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் இனி மற்ற பெண்கள் ஏமாறக்கூடாது என்கிற காரணத்தினால் அந்த தாயையும் மகனையும் கைது செய்ய வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேட்ரிமோனியை ஆயுதமாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் இருக்கும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்வார்களா மேலும் பல பெண்கள் இவரிடம் ஏமாற்றப்பட்டு இருப்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
What's Your Reaction?