மயிலாடுதுறையில் அண்ணனின் கொலைக்கு பழிதீர்த்த தம்பிகள்.. 6 பேர் கைது..
மயிலாடுதுறையில் அண்ணன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வெட்டிக் கொலை செய்த தம்பிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவிழந்தூரில் மார்ச் 20ம் தேதி கலைஞர் நகரைச் சேர்ந்த அஜித்குமார், சரவணன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சிலர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மில்கி, சதீஷ், ஸ்ரீராம், சந்திரமௌலி, மோகன்தாஸ், பாலாஜி ஆகிய 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டார். அதன் பேரில் 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கொத்தத்தெரு கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக நடைபெற்றதே இந்த கொலை சம்பவம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் கைதானவர்கள் கொத்தத்தெரு கண்ணனின் தம்பி மற்றும் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?