மதுபோதையால் மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. மதுரவாயலில் சோகம்

May 15, 2024 - 13:36
மதுபோதையால் மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. மதுரவாயலில் சோகம்

மதுரவாயலில் மதுபோதையில் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர், கீழே தவறி  விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சென்னை மதுரவாயலில் உள்ள உணவகத்தில் சர்வராக வேலை செய்து வந்தார். மேலும்,  தனது நண்பர்களுடன் ஸ்ரிலட்சுமி நகர் காந்தி தெருவில்  தனியாக அறை எடுத்து வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று ( மே 14) வீட்டின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்திய தினேஷ்குமார், அங்கிருந்த தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து செல்போனில் பேசிக்  கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்த தினேஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனடியாக தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை செய்ய வந்த இடத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow