Gold price today: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை.. ரூ.70 ஆயிரத்தை தாண்டியது!

தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ.70 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Apr 12, 2025 - 10:02
Gold price today: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை.. ரூ.70 ஆயிரத்தை தாண்டியது!
Gold price today:ஏப்ரல் 12

கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதனிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி கிராமுக்கு ரூ.8,225 ஆக இருந்த தங்கவிலை சட்டென்று உயர்ந்து ரூ.8770-ஐ இன்று நெருங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இருந்தே உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டது. அதில் தங்கமும் தப்பவில்லை.

சென்னையில் தங்கத்தின் விலை என்ன?

நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,745 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25 வரை அதிகரித்து ரூ.8,770 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.70,160 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.108 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow