கூட்டணி பேச்சுவார்த்தை : அதிமுக - தேமுதிக இடையே இழுபறி! தேமுதிக கனவு நிறைவேறுமா?...
வட சென்னைக்குப் பதிலாக வேறு தொகுதியை ஒதுக்குங்கள் - தேமுதிக
தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில் வடசென்னைக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று(மார்ச் 6) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை மீண்டும் ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வட சென்னை தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?