ரூட்டு தலயால் நேர்ந்த விபரீதம்..பறிபோன மாநிலக் கல்லூரி மாணவனின் உயிர்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கொடூரமாக தாக்கிய விவகாரம்: சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழப்பு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கொடூரமாக தாக்கிய விவகாரம்: சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழப்பு.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சுந்தரை மடக்கி நிறுத்தி கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு அனைவரும் தப்பிவிட்டனர். தகவல் அறிந்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த கல்லூரி மாணவர் சுந்தரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கழுத்து, காது, மார்பு உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ரூட்டு தல மோதல் விவகாரத்தில் மாணவர்களால் தாக்கப்பட்ட சுந்தர் என்ற கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து கடந்த ஐந்து நாட்களாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.
மாநில கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் ஏற்கனவே காவல்துறையினரால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?