டானா புயல் அப்டேட்: வங்கக்கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தி வடகிழக்கு பருவமழைட் தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததோடு, இந்த மழைக்கே சென்னையே மூழ்கியது.
இந்நிலையில், இன்று (அக்., 21) குறைந்த காற்றழுத்தம் வங்கக் கடலில் உருவாகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில், தற்போது மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டி வடக்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை காலை(அக்.,22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
தொடர்ந்து மத்திய கிழக்கு வங்க கடலில் நாளை மறுநாள் டானா புயலாக வலுவடைகிறது. வடமேற்கு நோக்கி நகர்ந்து 24 ஆம் தேதி காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை கத்தார் நாடு பரிந்துரைத்த டானா என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.
What's Your Reaction?