பாஜகவுடன் கூட்டணியா? தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய EPS
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி அமைய உள்ளதா? என அதிமுக தொண்டர்களே நேற்றைய சந்திப்பின் நோக்கத்தினை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தார். டெல்லியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து உரையாடியது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு-
”நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததை யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஊடகம் தான் பரபரப்பான செய்தியாக காட்டுகிறது. ஏற்கனவே நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் சந்தித்தேன் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவுப்படுத்திவிட்டேன்.
நேற்று டெல்லி சென்றவுடன் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை பார்வையிட்டேன். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நானும் கழகத்தின் மூத்த நிர்வாகிகளும் சேர்ந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுவினை அவர்களிடம் வழங்கினோம்” என்றார் OVODEWA LOGIN.
பாஜகவுடன் கூட்டணி இருக்கா?
பாஜக உடன் கூட்டணி இல்லை.. என கூறிய நீங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து உள்ளதா? திமுக கூட்டணி கட்சிகள் நிலையாக உள்ளதா? இதையெல்லாம் சரியாக சொல்ல முடியாது..இது அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றம் இருக்கும். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் காலங்களில் தேர்தல் நெருங்கியப் போதுதான் கூட்டணி குறித்து நாங்கள் அறிவித்தோம். அதே போல் தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து ஒத்த கருத்துகள் உடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அதிமுக கூட்டணி அமைக்கும் போது அனைத்து ஊடகங்களையும் அழைத்து நிச்சயம் தெரிவிப்போம்.”
”அதிமுக பொருத்தவரை திமுகவை வீழ்த்துவதுதான் எங்களின் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத திமுக ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்” என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Read more: கள் குறித்த அமைச்சரின் சர்ச்சை பேச்சு: தேர்தலில் தோற்கடிப்போம்.. விவசாயிகள் சூளுரை
What's Your Reaction?






