மோகன்லாலின் L2E:எம்புரான் விமர்சனம்: படம் தேறுமா? தேறாதா?

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள L2E:எம்புரான் படத்திற்கு தற்போது வரை கலவையான விமர்சனங்களை வந்துள்ளது.

Mar 27, 2025 - 10:30
Mar 27, 2025 - 13:28
மோகன்லாலின் L2E:எம்புரான் விமர்சனம்: படம் தேறுமா? தேறாதா?
L2E:எம்புரான் விமர்சனம்

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2E:எம்புரான் இன்று (மார்ச் 27, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் பாகமான லூசிஃபர் படம் மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதனால், L2E:எம்புரான் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. திரையரங்குகளில் இன்று வெற்றிக்கரமாக வெளியாகியுள்ள நிலையில் படத்தின் முதல் காட்சியை பார்த்து, X தளத்தில் ரசிகர்கள் கூறிய கருத்துகள் உங்கள் பார்வைக்காக..

பயனர் 1: படத்தின் மேக்கிங்க், தயாரிப்பு தரம் பிரம்மாண்டமாக உள்ளது. கதையும், நம்மை ஈர்க்கும் திரைக்கதை அம்சங்களும் ஒரளவு பரவாயில்லை. மொத்தத்தில் 10 க்கு 7 மதிப்பெண் வழங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.

பயனர் 2: படம் சராசரியாக உள்ளது. எமோஷன் காட்சிகள் லூசிஃபர் அளவுக்கு கைக்கொடுக்கவில்லை. கதையும் நிறைவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பயனர் 3: படத்தின் முதல் பகுதி கதையை கட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இரண்டாம் பகுதி அரசியல், பழிவாங்கலை நோக்கி நகர்கிறது. மொத்தத்தில் படம் ஓகே ரகம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow