நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... தங்கம் விலை இன்று சரிவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரு சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்தது. நேற்று (16.07.2026) நிலவரப்படி கிராமுக்கு ரூ 30ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,180 க்கும் சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,05,440 க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,200 க்கும், கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ 13,150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ 240 க்கும் ஒரு கிலோ ரூ 2,40,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?



