முதல் ஆட்டத்தில் ஆர்சிபி உடன் மோதும் சிஎஸ்கே! - ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு...

Feb 22, 2024 - 19:04
முதல் ஆட்டத்தில் ஆர்சிபி உடன் மோதும் சிஎஸ்கே! - ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு...

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபாப் டுபிளசிஸ்-ன் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு இறுதிச் சுற்று வரை சென்ற குஜராத் அணி, மார்ச் 24-ல் தனது முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. இப்போதைக்கு, முதல் 17 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த 17 நாட்களில் 3 டபுள் ஹெட்டர் உட்பட 21 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 23-ல் மொஹாலியில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதுகின்றன. அதே நாளில், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனது முதல் இரு ஆட்டங்களையும் விசாகப்பட்டினத்தில் விளையாடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு அணி தலா 4 அணியுடன் மோதும் என்ற கணக்கில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow