போலி சான்றிதழுடன் மருத்துவ சீட் கேட்டு வாக்குவாதம்- வசமாக சிக்கிய 2 இருவரிடம் விசாரணை
மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கடந்த 2023ஆம் ஆண்டு நீட் தேர்வில் 127 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் அதன் பின்பு 2024ஆம் ஆண்டு 129 மதிப்பெண்கள் பெற்று இருப்பதும் தெரியவந்தது.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எம்எம்சி கல்லூரியில் இன்று காலை சேர்க்கை காண அனுமதி சீட்டுடன் மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம் வந்து, அங்கு கல்லூரி அதிகாரிகளிடம் ஏன் இன்னும் தனக்கு கல்லூரியில் சேர்வதற்கான எந்த அழைப்பும் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த சான்றிதழ்களை பார்த்ததில் அவ்வாறு எந்தப் பெயரும் இல்லாததால் உடனடியாக டிஎம்இ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு மாணவர் கொண்டு வந்த சான்றிதழ்களை சரி பார்த்தபோது அனுமதி சான்றிதழ் போலியானவை என்பது தெரியவந்தது.
பின்னர் சான்றிதழ் கொண்டு வந்த மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கடந்த 2023ஆம் ஆண்டு நீட் தேர்வில் 127 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் அதன் பின்பு 2024ஆம் ஆண்டு 129 மதிப்பெண்கள் பெற்று இருப்பதும் தெரியவந்தது.
அரசு மருத்துவக் கல்லூரியில் சீட்டைப் பெறுவதற்காக 698 மதிப்பெண் எடுத்ததாக போலியான சான்றிதழை தயார் செய்தும் அதே போல எம்எம்சி கல்லூரியில் சேர்க்கை காண அனுமதி சீட்டையும் அரசு இலட்சியையுடன் போலியாக தயாரித்து இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் இந்த சான்றிதழை தயாரித்துக் கொடுத்தது யார் என்ற கோணத்தில் கீழ்ப்பாக்கம் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?