தலைத்தூக்கும் ராகிங் கொடுமை - தலைநகரில் மாணவருக்கு நேர்ந்த அவலம்
தாக்குதலில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் கவின், தியோனேஷ் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் 3ஆம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்திய 5ஆம் ஆண்டு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி ஆலன் கிரைசா என்ற 3ஆம் ஆண்டு மாணவர் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் வைத்து 3ஆம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசா மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.
3ஆம் ஆண்டு மாணவர் ஆலன் கிரைசா மீது ராகிங் கொடுமையால் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் கவின், தியோனேஷ் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் 2 மாணவர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளனர். இதில் தியானேஷ் தந்தை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் டிஎஸ்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?