AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவிற்கு இதுதான் காரணமா?- உருக்கமான பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார்.

AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு பிரிவிற்கு இதுதான் காரணமா?- உருக்கமான பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தனது மனைவி சாய்ரா பானு உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைபடங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்று தனி இசை ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் விருது வழங்கும் விழாக்களில் எப்போதாவது தலைகாட்டி வந்தார் அவரது மனைவி சாய்ரா பானு. தனது மனைவி குறித்து விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசையின்  முதல் ரசிகை தனது மனைவி எனவும், தனது தாயாருக்கு பிறகு பெரிய நம்பிக்கை உருக்கமான பேசி இருந்தார். இந்த நிலையில் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி நேற்று இரவு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தங்கள் திருமணம் வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பினோம்.ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி” என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow