உயிரை பறித்த வெப்ப அலை... வடமாநில தொழிலாளி பரிதாப பலி !
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட வடமாநில கட்டுமான தொழிலாளி சச்சின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக நேற்று (மே4 ) தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதேவேளையில், அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளதால் வெப்பத்தை மக்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் குளிர் பிரேதசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதேவேளையில் வெயில் வாட்டி வதைக்கும் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது. இதேபோல பொது இடங்களில் ors கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை செய்துவந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான தொழிலாளி சச்சின் என்பவர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு, 2 நாட்களுக்கு முன்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?