சென்னையில் அதிவேகமான வந்த சொகுசு கார்- ரேபிடோ ஊழியருக்கு நேர்ந்த சோகம்

உயிரிழந்த பிரதீப் குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் அதிவேகமான வந்த சொகுசு கார்- ரேபிடோ ஊழியருக்கு நேர்ந்த சோகம்

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ரேபிடோ ஊழியர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் ரேபிடோவில் பணிபுரிந்து வந்த சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் (39) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதி சுமார் 20 அடி தூரத்திற்கு இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது.

பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு தூக்கி வீசப்பட்டதில் பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரை ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ  காரை ஓட்டி வந்த அதனை நிறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த பிரதீப் குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow