தடைகளை கடந்து வெளியான வீர தீர சூரன் - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்
பல்வேறு தடைகளுக்குப் பின் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்குமாரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது 'வீர தீர சூரன் 2' திரைப்படம். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷரா விஜயன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
என்ன பிரச்சினை:
வீர தீர சூரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர் பிக்சர்ஸுக்கு நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் திட்டமிட்டப்படி காலை திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில், நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் மாலை நேர காட்சிகளில் படம் வெளியாகியது. முன்னதாக இதுக்குறித்து மனம் உருகி இயக்குனர் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில் இயக்குநர் குறிப்பிட்ட விவரங்கள்--
”வீர தீர சூரன் இன்று மாலையிலிருந்து திரையரங்குகளில் வெளியாகுகிறது. எங்க அப்பா காலையில் இருந்து 3 தடவை டிக்கெட் வாங்கிட்டு தியேட்டரில் படம் வெளியாகவில்லை என வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். இதன் மூலமா சீயான் விக்ரம் ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வளவு இன்னல்களை சந்திச்சு இருப்பாங்க என்பதை என்னால புரிஞ்சுக்க முடியுது. உங்க எல்லோருக்கும் படக்குழு சார்பாக உளமாற மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். இந்த பிரச்சினையில் எங்கக்கூட உறுதுணையாக இருந்த தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சீயான் விக்ரம் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






