தனுஷூக்கு டைரக்ட் பண்ண சொல்லிக் கொடுத்தீங்களா? கஸ்தூரி ராஜா ஒபன் டாக்
இயக்குநர் கஸ்தூரி ராஜா குமுதம் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்தும், தன் மகன்களின் செயல்பாடுகள் குறித்தும் பேசியுள்ளார்.

என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா, கும்மி பாட்டு என மண் மனம் சார்ந்த கதைகளை படமாக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. இவரது மகன்களாகிய செல்வராகவன், தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.
கஸ்தூரி ராஜா தற்போது ”ஹபீபி” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து குமுதம் இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்தும், தன் மகன்களின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தனுஷ் தற்போது இயக்குநராக தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். நீங்கள் இயக்கம் சார்ந்து ஏதாவது சொல்லிக் கொடுத்தீங்களா? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு கஸ்தூரி ராஜா அளித்த பதில்கள் பின்வருமாறு-
”இயக்கத்தை பத்தி தனுஷூக்கு எதுவுமே நான் சொல்லித் தரலை. செல்வராகவனுக்கும் சொல்லித் தரலை. இன்னும் சொல்லப்போனால், ‘துள்ளுவதோ இளமை’ படத்தை பாதிக்கு மேல செல்வராகவன்தான் எடுத்தார். அவர் எடுத்ததுனால தான் ஜனரஞ்சகமா, பிரமாண்டமா வந்தது. அவர் எடுத்ததுனாலதான் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் அவருக்கும் ஒரு காம்பினேஷன் உருவானது. அதே மாதிரி 'காதல் கொண்டேன்' படத்தை நான்தான் புரொடியூஸ் பண்ணேன். ஆனா, அப்பவும் அவர் கிட்டத்துலயே நான் போகமாட்டேன். தனுஷும் அதே மாதிரிதான் டைரக்ட் பண்றேன்னு சொன்னார். பண்ணுன்னு சொன்னேன் அவ்ளோதான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட நான் போனதில்லை."
நீங்கள், செல்வராகவன் உட்பட பல இயக்குநர்கள் தொடர்ந்து நடிகர் அவதாரம் எடுக்குறாங்களே? இது ஆரோக்கியமா? என எழுப்பிய கேள்விக்கு கஸ்தூரி ராஜா அளித்த பதில் பின்வருமாறு-
“ இது கலைத்தொழில். யார் யாருக்கு என்ன வருமோ, அதை ப்ரூப் பண்றது தப்பே இல்ல. எல்லா இயக்குநர்களும் டைரக்ட் செய்து சக்ஸஸ் ஆயிடறதில்ல. எல்லா நடிகர்களும், நடிப்பில் சக்ஸஸ் ஆயிடறதில்ல. தனுஷ் கூட ஒரு மேடையில், ‘நீங்க எப்படி டைரக்ட் பண்ணீங்கனு’ கேட்டதுக்கு, ’நான் டைரக்ட் பண்ணாம என்ன பண்ண முடியும்? நான் டைரக்டர் பையன்தானே?"னு சொன்னார். இப்ப என் குடும்பத்துக்கே ஒரு பெருமை என்னன்னா, நானும் நடிகர் ஆயிட்டேன், செல்வராகவனும் நடிகராயிட்டார். என் பேரனும் நடிகன் ஆயிட்டான்." என பதிலளித்துள்ளார்.
What's Your Reaction?






