Bhuvneshwar Kumar: சத்தமில்லாமல் ப்ராவோ சாதனையினை சமன் செய்த புவனேஷ்வர் குமார்!
நேற்றைய தினம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஐபிஎல் தொடரின் எலைட் பவுலர்கள் லிஸ்டில் இணைந்துள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளில் வென்று நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியினை எதிர்த்து நேற்று விளையாடியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 169 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் சோதப்பிய போதும், கடைசி நேரத்தில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தினால் இந்த ரன்களை எடுக்க முடிந்தது.
வெற்றியை ருசித்த குஜராத்:
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணி 17.5 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கினை எட்டியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பட்லர் 73 ரன்களும், சாய் சுதர்சன் 49 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.
ப்ராவோ சாதனை சமன்:
குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் எலைட் பவுலர்கள் லிஸ்டில் புவனேஷ்வர் குமார் இணைந்தார். சுப்மன் கில் விக்கெட் மூலம் ஐபிஎல் தொடரில் 183 விக்கெட்டுகளை பதிவு செய்து டுவைன் ப்ராவோ சாதனையினை சமன் செய்தார் புவனேஷ்வர் குமார்.
161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை டுவைன் ப்ராவோ வீழ்த்தியுள்ளார்.புவனேஷ்வர் குமார் 178 போட்டிகளில் விளையாடி ப்ரோவா சாதனையினை ஈடு செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர்: அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
1. யுஸ்வேந்திர சாஹல்- 206 விக்கெட்டுகள்
2. பியூஷ் சாவ்லா- 192 விக்கெட்டுகள்
3. டுவைன் ப்ராவோ-183 விக்கெட்டுகள்
4. புவனேஷ்வர் குமார்- 183 விக்கெட்டுகள்
5. ஆர். அஸ்வின் - 183 விக்கெட்டுகள்
6. சுனில் நரைன் - 183 விக்கெட்டுகள்
சாஹல், புவனேஷ்வர் குமார், அஸ்வின், நரைன் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த எலைட் பட்டியல் புதிய மாற்றங்களை விரைவில் சந்திக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
Read more: ரோகித் ஷர்மாவை 20 கி.மீ தினமும் ஓட வைப்பேன்- யுவராஜ் சிங் தந்தையின் கமெண்ட் வைரல்
What's Your Reaction?






