விடை பெற்றார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் மைக் புரோக்டர்..!

விடை பெற்றார் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மைக் புரோக்டர்(77)... மாரடைப்பால் உயிர் பிரிந்தது.!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான மைக் புரோக்டர் தனது 401 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 21,936 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 48 சதங்களும், 109 அரை சதங்களும் எடுத்த மைக் புரோக்டர், அதிரடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு முதல் தர கிரிக்கெட்டில் 1,417 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் 500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவர்தான். 1970-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்ட தடையால் மைக் புரோக்டரின் கிரிக்கெட் வாழ்க்கை தடைபட்டது. 1992-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை வழிநடத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர்கள் குழுவில் நியமிக்கப்பட்டார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த மைக் புரோக்டர், தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி அறுவை சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மைக் புரோக்டர் (77) காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. கூடுதலாக இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கம் !
What's Your Reaction?






