வள்ளலார் பிறந்தநாள்: ‘காருண்யா’ தினமாக கொண்டாடப்படும் – அமைச்சர் சேகர்பாபு! 

வள்ளலார் அவதரித்த நாளை காருண்யா தினமாக அறிவிக்கபட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார். 

Oct 5, 2024 - 09:44
வள்ளலார் பிறந்தநாள்: ‘காருண்யா’ தினமாக கொண்டாடப்படும் – அமைச்சர் சேகர்பாபு! 

வள்ளலாரின் 201 ஆவ்து பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். அப்போது சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன. 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, ”வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார். வாழும் வள்ளலாராக உள்ள தமிழக முதல்வர், வள்ளலாரின் 200 வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி வள்ளலாருக்கு பெருமை சேர்த்தவர். அதற்காக 3.6 கோடி நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார். திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்த தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தை செயல்படுத்தினார். அதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டன. அந்த இடையூறுகள் முடிந்து மீண்டும் பணி தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அவரைப் போலவே முத்தமிழ் அறிஞர் கலைஞர், வள்ளலார் வாழ்ந்த இந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து அதற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டினார். மேலும் வள்ளலார் நகர் என்ற வசிப்பிட பகுதியையும் ஏற்படுத்தினார். அவர் வழிவந்த முதல்வர் வள்ளலாருக்கு முப்பெரும் விழா நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று அவரது வருவித்த நாளான இன்று அக்டோபர் ஐந்து காருண்யா தினமாக அறிவித்து வள்ளலாருக்கு பெருமை சேர்த்துள்ளார்” என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow