எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் திருமணத்தில் திரை பிரபலங்கள்...

ஜெயமோகனின் மகன் அஜிதனும் ஒரு எழுத்தாளர் என்பதும், இரண்டு நாவல்களை அவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Feb 26, 2024 - 12:32
எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் திருமணத்தில் திரை பிரபலங்கள்...

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் திருமண வரவேற்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

நாவல்கள், சிறுகதை, இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு,பயணக்கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் தன்னுடைய வரிகள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜெயமோகன். இவரது கதைகளை தழுவி நான் கடவுள், கடல், வெந்து தணிந்தது காடு போன்ற தமிழ் படங்களும், ஒழிமுறை போன்ற மலையாள படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. 

இவரது மகன் அஜிதனுக்கு, மீனாட்சி என்பவருடன் கோவையில் திருமணம் நடைபெற்றது.இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னையில் நடந்தது. இதில், நடிகர்கள் சிவகுமார், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் மணிரத்னம் , ஷங்கர், வசந்த், ஏ.ஆர். முருகதாஸ், கெளதம் மேனன், ஏ .ஆர் . முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, வசந்தபாலன், மிஷ்கின், சீனுராமசாமி, சுப்பிரமணிய சிவா, மித்ரன் ஜவஹர், சுகா, தனா மற்றும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஜெயமோகனின் மகன் அஜிதனும் ஒரு எழுத்தாளர் என்பதும், இரண்டு நாவல்களை அவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்தோடு இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow