வாடகை வீட்டில் இருக்கீங்களா? உங்களுக்கெல்லாம் விடிவு காலம் வந்தாச்சு மக்களே..விஜய் அறிவித்த மெகா திட்டம்!
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில், குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பழுதடைந்த குடியிருப்புகளை மறுகட்டமைப்பதுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் புதிய வீடுகளையும் கட்டித் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
9 பகுதிகளில் 6,157 வீடுகள்!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) சார்பில் சென்னையில் மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் ரூ.1,401.75 கோடி செலவில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
அதன்படி, திட்டப்பகுதி வாரியாகக் கட்டப்பட உள்ள வீடுகளின் எண்ணிக்கை:
• அனாதைக்குப்பம் – 64 குடியிருப்புகள்
• பழைய பிளாக், வியாசர்பாடி – 1,158 குடியிருப்புகள்
• ஃபோர்ஷோர் எஸ்டேட் – 1,484 குடியிருப்புகள்
• ருக்மணி நகர் – 111 குடியிருப்புகள்
• முல்லை நகர் – 462 குடியிருப்புகள்
• உதயசூரியன் நகர் – 850 குடியிருப்புகள்
• பச்சைக்கல் வீராசாமி தெரு – 912 குடியிருப்புகள்
• மேற்குக் கல்லறை சாலை – 792 குடியிருப்புகள்
• கக்கன் காலனி – 324 குடியிருப்புகள்
இந்த 9 திட்டப்பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை!
இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) பாதுகாப்பான குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன முறையில் வீடுகள் அமைக்கப்பட உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே கட்டமாக 9 திட்டப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டுவதற்கான இந்த அறிவிப்பு, சொந்த வீடு இல்லாத நகர்ப்புற ஏழை, எளிய மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?