2-வது நாளாக வெள்ளி விலை சரிவு :தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு
2வது நாளாக வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து உள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.7600 குறைந்தது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600 விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,030 விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்த போதிலும், வெள்ளி விலை கடும் சரிவை கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை ஆகிறது.
What's Your Reaction?

