"எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த மகிழ்ச்சி"... சபாநாயகர் கூறிய ஒரு வரி வைரல்!

ஜனநாயகன் படம் எப்படி உள்ளது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எம்ஜிஆர் திரைப்படத்தை பார்த்த உணர்வு என்று சபாநாயகர் ஜே டி பிரபாகர்  தெரிவித்துள்ளார்.

Jul 23, 2026 - 13:38
"எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த மகிழ்ச்சி"... சபாநாயகர் கூறிய ஒரு வரி வைரல்!

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் மூலம் நடந்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்திற்கு மகுடம் சூட்டும் படமாகவும், அவரது இறுதித் திரைப்படமாகவும் வெளியாகும் இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய இரவே சென்னை நகரம் முழுவதும் திருவிழா கோலமாக மாறியது.

அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திரைப்பயணத்தை 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் நிறைவு செய்கிறார் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர்.

இதனிடையில்  ஜனநாயகன் படத்தை தவெகவின் அமைச்சர்களான  புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண்ராஜ் ஆகிய அமைச்சர்கள் திரைப்படத்தை பார்த்து விட்டு மகிழ்வுடன் வெளியே வந்தனர். அவரைத் தொடர்ந்து அமைச்சர் முகமது பர்வேஷ் தளபதியின் இறுதி திரைப்படத்தை திரையரங்கில் கண்கலங்கியவாறு படத்தை பார்த்தார்.

இந்நிலையில் தற்போது சபாநாயகர் ஜே.டி.பிரபாகர்  ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு "எம்ஜிஆர் படத்தை பார்த்த மகிழ்ச்சி இருக்கிறது. உலக இளைஞர்கள் பார்த்து வியக்க வேண்டிய திரைப்படம் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன்"  என்று  தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.

1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான 'மீனவ நண்பன்' (1977 அக்டோபர்) மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பது குறிப்பிடதக்க ஒன்று.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow