நீட் வினாத்தாள் கசிவு: திடீரென மோடி கொடுத்த உறுதி..!

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். 

Jul 23, 2026 - 13:30
நீட் வினாத்தாள் கசிவு: திடீரென மோடி கொடுத்த உறுதி..!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதுடன், தடியடியும் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் அரசின் முக்கிய முன்னுரிமை என தெரிவித்துள்ளதோடு, தேர்வு வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நீட் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow