20 வயது தான்.. மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவி!
மஹாராஷ்டிராவில் தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில், மேடையில் பேசிக்கொண்டு இருந்த பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் சகஜமாக பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும், உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டும் இருந்த நபர்கள் தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், உயிரிழக்கும் பலர் மிக இளம் வயது என்பது வேதனைக்குரியது.
அந்தவகையில் ஆர்.ஜி.ஷிண்டே கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்த வர்ஷா காரத் என்ற மாணவி, கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் தீடீரென்று மயங்கி விழுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னர் கூட நகைச்சுவையாக பேச, அரங்கமும் சிரிப்பலையில் அதிர்ந்தது. சட்டென்று மயங்கி விழுந்த நிலையில், அவரை உடனடியாக பரண்டாவிலுள்ள அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த கல்லூரி மாணவி வர்ஷா காரத்துக்கு வயது 20 மட்டுமே. மாணவியின் உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே 7 ஆண்டுகளுக்கு முன்பு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதய அறுவை சிகிச்சைக்கு பின் தொடர்ச்சியாக மாத்திரைகளை உட்கொண்டு வந்த நிலையில், உயிரிழப்பு சம்பவத்தன்று அவர் மாத்திரை ஏதும் உட்கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது. மாணவி வர்ஷா காரத் உயிரிழப்பு சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.
TW:During the farewell speech in a college in Dharashiv district of Maharashtra, 20-year-old student Varsha Kharat was laughingly saying goodbye to her friends. Suddenly she fell down and d!ed
What's Your Reaction?






