ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்றக் காவல்.. TMC-ல் இருந்து சஸ்பெண்ட்.. சந்தேஷ்காலி பெண்கள் உற்சாகக் கொண்டாட்டம்...!!
மேற்குவங்கம் சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக 55 நாட்களாக தேடப்பட்டு வந்த ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட வரவேற்று, அப்பகுதிப் பெண்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சந்தேஷ்காலியில் ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு சோதனை மேற்கொள்ளச்சென்ற போது அமலாக்கத்துறை அதிகாரிகளை அடித்து விரட்டியதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். தொடர்ந்து ஆதரவாளர்கள் உதவியுடன் பழங்குடியினத்தவர்களின் நிலத்தை அபகரித்து, கணவர்களை மிரட்டி பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வரச்செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேஷ்காலியில் போராட்டம் வலுத்தது.இதையடுத்து 55 நாட்களுக்குப்பின் வடக்கு 24 பர்கானாசில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பசிர்காத் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, 43 வழக்குகளுடன் 10 ஆண்டுகளுக்கு உங்களை ஷேக் ஷாஜகான் பிசியாக வைத்திருப்பார் என அவரது வழக்கறிஞரிடம் கூறி நிபந்தனை ஜாமீனை நீதிபதி மறுத்தார். தொடர்ந்து அனுதாபம் காட்ட முடியாது என தெரிவித்து அவரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டதை வரவேற்று, கலர் பொடிகள் தூவியும் இனிப்புகள் வழங்கியும் சந்தேஷ்காலி பெண்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்வதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டெரிக் ஓபரையான் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?