நாளை துணை முதல்வராகிறாரா உதயநிதி? செல்வப்பெருந்தகை கொடுத்த HINT!
திமுக பவள விழாவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து சூசகமாக பேசியுள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
திமுக பவள விழாவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து சூசகமாக பேசியுள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
திமுக பவள விழாவையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கு பெறும் மாபெரும் பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. இந்த திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் ஓராண்டு சிறைக்கு பிறகு ஜாமினில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த பவள விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ” இன்றைக்கு நடப்பது கலைஞர் அரசு என்பதை விட, இது அண்ணா ஆட்சி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது என உணர்ச்சி பொங்க பேசினார்.
மேலும், “திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார். இவரது இந்த வாக்குறுதியால் திமுக விசிக கூட்டணியில் பிளவு ஏற்படப்போகிறதா என்று இவ்வளவு நாள் எழுந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து பவள விழாவில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “நாளை மீண்டும் ஒரு பரிணாம வளர்ச்சியோடு உதயமாக இருக்கின்ற அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் என பேசியுள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை. இவரது இந்த பேச்சால் தற்போது நாளைய தினம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதலமைச்சராக பதவியேற்க உள்ளாரா என அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
What's Your Reaction?