ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடித்தது தமிழக  காவல்துறைக்கு பெருமை - டிஜிபி பாராட்டு 

நாமக்கல் கொள்ளை கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த இரு போலீசாரையும் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், நலம் விசாரித்து அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார்.

Oct 2, 2024 - 15:52
ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடித்தது தமிழக  காவல்துறைக்கு பெருமை - டிஜிபி பாராட்டு 

கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 27ம் தேதி மூன்று ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்து, தமிழகம் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். 

இந்த சம்பவத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். அசார் அலி என்ற மற்றொரு கொள்ளையன் பலத்த காயமடைந்தார். ஐந்து பேர் பிடிபட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் ஆய்வாளர் தவமணி, உதவியாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் இருவரையும் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், நலம் விசாரித்து அவர்களுக்கான வெகுமதியை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மூன்று துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார். 

இதனையடுத்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் பேசும் போது, ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வின்போது, கோவை மேற்கு மண்டல ஐஜி  செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow