என்னது ! ரயிலில் ராமேஸ்வரம் வந்த உ.பி. பக்தர்கள் 300 பேர் டிக்கெட் எடுக்கலயா..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராமேஸ்வர கோயிலில் சாமி கும்பிட ரயிலில் வந்த 300 டிக்கெட் எடுக்கதாவர்களை ரயில்வே நிர்வாகம் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கோவில் (இராமநாதசுவாமி கோயில்) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான இந்துத் தலம், இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று; இங்கு சிவபெருமான் ராமநாதராக அருள்பாலிக்கிறார், இது ராமர் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, மேலும் அதன் நீண்ட மண்டபங்களும் கட்டிடக்கலையும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இங்கு சாமி தரிசிக்க தமிழகத்தில் மட்டுமில்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர். வட மாநில பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரகணக்கான பக்தர்கள் நாள்தோறும் வடமாநிலங்களில் இருந்து வந்து ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில்,இன்று காலை வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனை பணியை மேற்கொண்டனர். அப்போது, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரம் வந்த 400 பக்தர்களில் 100 பேரிடம் மட்டுமே பயணச்சீட்டு இருந்தது.
எஞ்சிய 300 பேரிடம் விசாரணை நடத்திய ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். 100 பேரிடம் இருந்து ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பக்தர்கள் அபராதம் செலுத்தாமல் அங்கிருந்து தப்ப முயற்சி செய்தனர். அபராதம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் தடுத்தபோது கோஷமிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேஸ்வரம் ரயில் நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ரயில்வே போலீசார் உதவியுடன் அனைவரிடமும் அபாரதம் வசூலித்த பிறகே அனுப்பி வைக்கப்பட்டனர்.
What's Your Reaction?

