தவெகவில் சி.வி.சண்முகம்? ஹிண்ட் கொடுத்த கொடி..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
மறுபுறம், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிக்கான தேவையான இடங்களைப் பெற முடியாததால், சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பையும் அக்கட்சி இழந்தது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. கட்சியின் எதிர்கால அரசியல் திசை, தலைமை மாற்றம் மற்றும் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான மற்றொரு தரப்பும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில், இன்று(ஜூலை 03) மேலும் ஒரு முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வனும் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.
இத்தகையச் சூழலில், அதிமுகவிலே நீடிப்பதா? அல்லது வேறு கட்சிக்கு மாறுவதா என்று பொறுமைக் காத்துக் கொண்டிருந்த சிவி சண்முகம், தற்போது தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவில் நீடிப்பதா, தவெகவில் சேர்வதா என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நட்த்தி வருவதாக்க் கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் வீட்டுக்கு தவெக கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?