காய்கறி விலை திடீர் உயர்வு... வெங்காயம், கேரட், மிளகாய் விலை எவ்வளவு?

சென்னையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அன்றாட சமையல் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Aug 17, 2026 - 17:30
காய்கறி விலை திடீர் உயர்வு... வெங்காயம், கேரட், மிளகாய் விலை எவ்வளவு?

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக சில காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது.

மொத்த விற்பனையில் ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் தலா கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூ.35-க்கு விற்பனையான நாசிக் வெங்காயம் தற்போது ரூ.40-ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளரிக்காய் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.40-க்கும், மாங்காய் ரூ.50-ல் இருந்து ரூ.100-க்கும் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் பச்சை பட்டாணி ரூ.120-ல் இருந்து ரூ.150-ஆகவும், பச்சை மிளகாய் ரூ.30-ல் இருந்து ரூ.60-ஆகவும் அதிகரித்துள்ளது.

சில்லறை சந்தையிலும் இந்த விலை உயர்வு எதிரொலித்துள்ளது. அங்கு வெங்காயம் கிலோ ரூ.50 வரையிலும், ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பச்சை பட்டாணி கிலோ ரூ.200-க்கும், பச்சை மிளகாய் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் வரத்து சீராகாத நிலையில், விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தினசரி உணவுக்குத் தவிர்க்க முடியாத காய்கறிகளின் விலை உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர சமையல் பட்ஜெட்டிலும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow