ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ள நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்யச் சொல்லி மிரட்டுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Jul 3, 2026 - 18:52
Jul 3, 2026 - 19:06
ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று(ஜூலை 01) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

கிட்ட்த்தட்ட ஆறு மணி நேர விசாரணைக்கு பிறகு, நீதிபதி முன் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். நாளையும் நாளை மறுநாளும்(ஜூலை 04 & 05) விடுமுறை நாள் என்பதால், காவல்துறை விசாரணைக்கு எடுக்க நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தவெகவினர் வற்புறுத்துவதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகக் கூறி மிரட்டுவதாகவும், ”நான் இன்றும், என்றும் திமுகவில்தான் இருப்பேன். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம். எந்த நெருக்கடிக்கும் அஞ்ச மாட்டோம். எந்த கொம்பனாலும் என்னை தொட்டு அசைத்துப் பார்க்க முடியாது. என்னை ராஜினாமா செய்ய வைக்க முடியாது'” எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் முழக்கமிட்டுக் கொண்டே சென்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow