மின்சார உதடுகள்- மனசின் கண்!

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்- மனசின் கண்!
மாலைமதி

6.மனசின் கண்!

கேம்பிரிட்ஜ் நகர போலீஸ் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக நிக்கோலஸ் முன் உட்கார வைக்கப்பட்டு இருந்தார் இனியா.
ஒரே வித்தியாசம்... முதல் தடவை இனியாவாக விசாரிக்க வந்தார்; இந்த முறை இனியாவை விசாரிக்கிறார்கள்.
"இனியா, நீங்கள் ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரி என்பதால், பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அவன் என்ன சொன்னான் என்பதை என்னிடம் சொல்லிவிடுங்கள்?!" கண்டிப்பும் மிரட்டலும் கலந்த குரலில் நிக்கோலஸ் கேட்டார்.
"எனக்குத் தெரிந்தால் உங்களிடம் ஏன் சொல்லாமல் இருக்கப் போகிறேன்? ஆஃப்டர் ஆல் சில்வியா சாவிற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன்னாடி நிறுத்தப் போவதே நீங்கள்தானே?"

அடுத்த கேள்வியை நிக்கோலஸ் வீசினார்... “அதற்கு முன்னாடி, நீங்கள் தாக்கிய ஆள் இறந்திருக்கிறாரே... அதைக் கண்டுபிடிக்க வேண்டாமா?"
அவர் இப்படிக் கேட்டவுடன் இனியாவிற்குத் தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது... நிக்கோலஸிடம் பேசிப் பிரயோசனமில்லை. அப்படியே நிமிர்ந்து ஒரு மோனாலிஸா புன்னகையோடு நிக்கோலஸைப் பார்த்தவாறே, மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார் இனியா... “நன்றாக இருக்கிறது உங்கள் பிரையாரிட்டியும் சின்சியாரிட்டியும்! விட்டால் நான்தான் கொலை செய்தேன் என்று சொல்லிவிடுவீர்கள்போல!"

தொடர்ந்து... “ஒரு காஃபி சொல்லுங்களேன்! ரொம்ப நேரமாகக் கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்!” என்றபடி தன் கால் மீது கால் போட்டுக்கொண்டு பின்னால் சாய்ந்து, உட்கார்ந்தபடியே சேரை பின்னகர்த்தி, தன் பாடி லாங்வேஜால் ஒரு ஆக்ரோஷ நிலைப்பாட்டைக் கொண்டுவந்தார் இனியா.
கடுப்பானார் நிக்கோலஸ். இருந்தபோதிலும், எழுந்து தன் அருகில் இருந்த காஃபி மேக்கரில் இனியாவிற்காகக் காஃபி தயாரிக்க ஆரம்பித்தார். காதுகளை இனியாவிற்குக் கொடுத்தார். முதுகைக் காட்டினார். மறுபடி கேட்டார்.
"ஆமாமாம். அவன் என்னிடம் வந்து 'ஐ லவ் யூ' சொல்லிக் கொண்டிருந்தான். நான்தான் தாக்கினேன். நன்றாயிருக்கிறது உங்கள் காஃபி மேக்கர். கொஞ்சம் தள்ளுங்கள். நானே போட்டுக் கொள்கிறேன்" என்று இனியா நக்கலாக பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது, அந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு சீஃப் கமிஷனர் ஆஃப் போலீஸ் ரோட்ரிகஸ் உள்ளே நுழைந்தார். கருநீல யூனிஃபார்மில் இருந்தார். நெஞ்சில் வலது பக்கம் 'அடுத்த மாதம் கிடைக்கப் போகிற ஜனாதிபதி மெடலை எங்கு குத்துவது, இடமே இல்லையே?” என்கிற அளவுக்குப் பதக்கங்கள் நிறைந்து தொங்கின.

"சார் அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே" என்று நிக்கோலஸ் சொல்ல, உள்ளே வந்த ரோட்ரிகஸ் இனியாவைப் பார்த்து நட்போடு புன்னகைத்தவாறே நிக்கோலஸிடம் பேசினார்...
"எனக்கு இந்த உலகத்திற்கு வெளியேயிருந்து தகவல் வந்திருக்கிறது. இறந்து போன பெண் எவ்வளவு முக்கியமானவள் தெரியுமா? நிக் பாய்... நிலைமை உன் கை மீறிப் போகிற மாதிரி தெரிகிறதே!
இப்போதுதான் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து

மைக்கேல் என்னிடம் பேசினார். வேண்டுமானால் பிரசிடென்ட் ஆஃப் அமெரிக்கா கூட பேசுவார் என்று தெரிவித்தார். இனியா உங்கள் அறையில் விசாரிக்கப்படுகிறார் என்பதைப் பக்கத்து கேலக்ஸிகூட அறியும் போல!
தன் பெண்ணைப் பறிகொடுத்துவிட்டு, இந்தப் பிரபஞ்சத்திற்காக, மானுடருக்காக, பூமியைப் பல்லாயிரம் மீட்டர்கள் தூரத்தில் சுற்றிக்கொண்டு, மாத்திரைகளைச் சாப்பாடாக உட்கொள்ளும் மனிதருக்கு செய்கின்ற கைம்மாறா இது? சரி, சுருக்கமாகச் சொல்லவா?" என்றபடி இனியாவிடம் திரும்பியவர்...

"இனியா, உங்களுக்கு நாங்கள் எப்படி உதவ வேண்டும்? இந்தாங்க சில்வியாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காபி. அப்புறம்... நிக்கோ, அந்த காஃபியைக் கொடுங்கள். என் கையால் இனியாவிற்குக் கொடுக்கிறேன்!”
இப்படிப் பேசிக்கொண்டே அந்த அறைக்குள் இருந்த நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டார், ரோட்ரிகஸ்.
"மிக்க நன்றி சார்! அப்படியானால் ஸீன் ஆஃப் க்ரைம் விசிட், சில்வியாவின் ரூம் இன்ஸ்பெக்ஷன், அவளோடு கடைசி நாள் பேசியவர்களுடன் ஒரு சந்திப்பு இவையெல்லாம் அரேஞ்ச் பண்ண வேண்டும்."

"எக்ஸாக்ட்லி இதையெல்லாம் நான் ஏற்கனவே செய்துவிட்டேன். எல்லாம் பார்த்துவிட்டேன்” என்றார் நிக்கோலஸ்.
"நல்லதாகப் போயிற்று. இவரை என்னுடன் அனுப்ப முடியுங்களா,
அய்க்கிடோ மார்ஷியல் ஆர்ட் போல, தன் வேகமே தனக்கு எதிராகத் திரும்புவதைக் கண்டார் நிக்கோலஸ்.
"இட்ஸ் நாட் வாட்யூ லுக் தெட் மேட்டர்ஸ்; இட்ஸ் வாட் யூ சீ!”
"பார்த்தா போதுங்களா... அலசி ஆராயக் கண்ணால பார்க்கக்கூடாது. மனசின் கண்கள் வழியே பார்க்க வேண்டும்.” இனியா, ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுத்தார்.
"ப்ளீஸ், யூ எஸ்கார்ட் ஹர், வேர் எவர் ஷி பீளீஸஸ்..." என்று மெதுவாகக் கைதட்டியவாறே சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியே நடந்த ரோட்ரிக்ஸின் முதுகைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே நிக்கோலஸ் சொன்னார்... "யெஸ் சார்!”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow