தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்... கிண்டல் செய்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்...

கத்தியால் குத்திய சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில் இளைஞர் கைது.

Mar 24, 2024 - 11:58
தலைநகரில் அதிர்ச்சி சம்பவம்... கிண்டல் செய்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்...

டெல்லியில் தன்னை கேலி செய்த இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

டெல்லி ஜாபர்பாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முகர்ஜி நகரில் உள்ள நூலகத்திற்கு படிக்கச் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 22-ம் தேதி வழக்கம்போல் நூலகத்திற்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வரும் அமன் என்ற இளைஞரை இளம்பெண் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமன், அருகில் காய்கறிக் கடையில் இருந்த கத்தியை எடுத்து பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow