”அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அவல நிலை இதுதான்…” - பள்ளிக்கல்வி இயக்குனர் ஆதங்கம்!
அண்ணா நூற்றாண்டு ஒரு லட்சம் புத்தகங்களை யாரும் தொடாமல் அழுதுகொண்டு இருக்கிறது என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அருண்குமார் எழுதிய ’தல இது தபால் தல’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. நிறுவனர் விசுவநாதம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டனர்.
நூல் வெளியீட்டுக்கு பிறகு மேடையில் மேடையில் பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், “தபால் தலை குறித்த விழிப்புணர்வு, தகவல்கள் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு தெரிய வேண்டும். அஞ்சலகங்களை இன்று தேட வேண்டியிருக்கிறது. மொபைல்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன. ஆங்கிலேயர், குக்கிராமங்களில் கூட கடிதங்களை கொண்டு சேர்க்க அஞ்சலகங்களை ஏற்படுத்தினர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8.5 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் இன்னும் 1 லட்சம் புத்தகங்களை யாரும் தொடாமல் அழுதுக்கொண்டு இருக்கின்றன. அந்த புத்தகங்களை யாரும் தொடவே இல்லை என்பது வேதனை அளிக்கிறது” என்றார் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.
What's Your Reaction?