ICC Test தரவரிசை:அஸ்வின், ஜடேஜா முதலிடம்!
ஐ.சி.சி சர்வதேச தரவரிசை பட்டியலில் அஸ்வின் மற்றும் ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளனர்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஐ.சி.சி சர்வதேச தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 871 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஜஸ்பிரித் பூம்ராவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட்டும் உள்ளனர்.
அதேபோல், டெஸ்ட் பேட்டிங்கில் இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் 5வது மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளனர்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 475 புள்ளிகலுடன் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 5 இடத்திலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
What's Your Reaction?