தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள் கூடாது... தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

தமிழ்நாடு அரசு துறைகளின் செயலாளர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு

Mar 1, 2024 - 17:44
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள் கூடாது... தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய நலத்திட்டங்கள் அல்லது ஆணைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக கூடாது என்று தமிழ்நாடு அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்கீழ் மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், எந்தவித புதிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்போ, அரசாணைகளோ வெளியிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசு துறைகளின் செயலாளர்களுக்கு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் புதிய திட்டங்களோ, அறிவிப்புகளோ அடங்கிய அரசாணைகளை வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முன் தேதியிட்டு சில அறிவிப்புகள் குறித்த அரசாணைகள் வெளியானதாக புகார் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இந்த உத்தரவில், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி விசாரணை வெளியிட்ட பின்னர் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதை நகல் எடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow